2026 மே 07, வியாழக்கிழமை

மக்களின் வருகையில் வீழ்ச்சி

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

ஊரடங்குச்சட்டம், இன்று(1) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், நுவரெலியா மாவட்டத்தில், பல பிரதேசங்களிலும் உள்ள பிரதான நகரங்களில், பொதுமக்களின் வருகை, மிகக் குறைவாகவே காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த தினங்களை போன்று, இன்றையதினம் அதிகளவிலான பொதுமக்கள் தலவாக்கலை லிந்துலை போன்ற நகரங்களுக்கு வருகை தரவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதான நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில், சில பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில், வர்த்தகர்களிடம் வினவியபோது தலைநகரிலிருந்து பொருள்களை ஏற்றி வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமையால் சில பொருள்களுக்கு மாத்திரமே தட்டுப்பாடு நிலவுவதாகவும், எதிர்வரும் தினங்களில் அவை முற்றாகத் தீர்க்கப்படும் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .