2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மக்களுக்கு நிவாரணம்

Janu   / 2023 ஜூலை 04 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஹட்டன்  செனன் கே.எம். பிரிவில் 4 வீடுகள் சேமதமாகியுள்ளது.

இதனையடுத்து, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் பணிப்புரைக்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர் அவர்களுக்கு உடனடியாக நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

 பிரதி தலைவர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ராஜரத்தினம், யோகேஸ்வரி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், பிரத்தியேக உதவியாளர் தயாளன் ஆகியோர் இணைந்து பாதிக்கப்பட்ட இடத்துக்கு உடன் விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

 மேலும், ஹட்டன் மனிதவள அபிவிருத்தி ஸ்தாபன உத்தியோகத்தர்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி துரித கதியில் குடியிருப்புகளை சீர்செய்து எதிர்காலத்தில் நீர் குடியிருப்புகளுக்கு உட்செல்லாதவாறு தடுப்புகளையும், வடிகாலமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X