Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன்
மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில், ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேரை, இன்று (24) கைது செய்துள்ளதாக, அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தில், நேற்று (23) முதல் வியாழக்கிழமை காலை 6 மணிவரை, ஊரங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை பிறபகல் 2 மணி தொடக்கம், இன்று பகல் வரையும் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காத்தான்குடியில் 8 பேரும் வாகரையில் 2 பேர் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 20ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையிலான ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தினங்களில், மட்டு மாவட்டத்தில் சட்டத்தை மீறி நடமாடிய 44 பேரை இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago