Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 28 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
லிந்துலை- மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(28) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை முறையாக வழங்காத காரணத்தினால் இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில், தோட்ட அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சரியான பதில் கிடைக்காத காரணத்தினால், தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக சத்திய கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய, “தற்போது கொழுந்து விளைச்சல் குறைவால் 18 கிலோகிராம் கொழுந்தை பறிக்க முடியாது என்றும் எடுக்கும் கொழுந்து நிறைக்கு ஏற்ப முழுநாள் சம்பளத்தை வழங்க வேண்டும்”.
“காலை 7 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பகல் உணவு பெற்றுக் கொள்ள 12 மணிக்கு விடுமுறை வழங்க வேண்டும்”.
உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் சத்தியகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது கோரிக்கைகளை உடனடியாக செய்து தராவிட்டால், தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்..
இந்த விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்று (28) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக எவ்வித அறிவித்தலும் தமக்கு வழங்கவில்லை எனவும் தொழிற்சங்கத்திற்கும் அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தற்போது 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் அப்போதுதான் தோட்டத்தை நடத்திச் செல்ல முடியும் சிலர் தங்களுடைய இலாபத்துக்காக செயல்படுகின்றனர்.
தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தன்னிடம் உள்ளது அதன் அடிப்படையில் கடந்த மாதங்களில் தொழிலாளர்கள் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் நல்ல சம்பளமும் வாங்கினார்கள் இவர்களுக்கான தேவையான சலுகைகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதாக குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .