2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மணலுடன் கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

 

தலவாக்கலை-வட்டகொட பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி லொறியில் மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை கைதான நபரை, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ள தலவாக்கலை பொலிஸார், அந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, மேற்படி நபரை விசேட அதிரடி படையினர், புதன்கிழமை கைதுசெய்ததுடன்,  லொறி மற்றும் மணலுடன் சந்தேக நபரை தலவாக்கலை பொலிஸில் ஒப்படைத்தனர்.

விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார்  குறித்த நபரை பொலிஸ் பிணையில் விடுவித்துடன், குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .