Editorial / 2020 மே 10 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா- மணிக்கவத்தை தோட்டத்தில், நேற்று (09) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், தோட்டத்திலுள்ள பிள்ளை பராமரிப்பு நிலையத்திலும் தோட்டத்திலுள்ள தேவாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிறுப்பில் 7 வீடுகளின் கூரைகள் எறிந்துள்ளதாகவும் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
முற்றாக எரிந்த வீடுகளில் இருந்த 18 பேரும், சமூக இடைவெளியைப் பேணும் வகையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மற்றையவர்கள், அவர்களது வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கூரைகள் எரிந்துள்ள வீடுகளின் தகரங்களுக்கு பதிலாக, விரைவில் புதிய தகரங்களை பொருத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக இடர்முகாமைத்துவத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான மெத்தைகள் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago