Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிஸ் என்டனி
இரத்தினபுரி கலவான வீதி, கரவிட்ட நகரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று நண்பகல், மண்மேடு பிரதான வீதியில் விழுந்ததால், கலவான, தெல்வல மற்றும் பேபொட்டுவ ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக, நிவித்திகலை பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதன் காரணமாக களுகங்கை, இறக்குவாணை கங்கை, வே கங்கை ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக, இடர்முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, கரையோரங்களில் வாழ்ந்து வரும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, இடர்முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மற்றும் மண்சரிவு அபாயமுள்ள எஹெலியகொட, இரத்தினபுரி, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்கள், மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025