Kogilavani / 2016 மே 26 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுதர்சினி சாமிவேல்
மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறி, தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை, மீண்டும் தத்தம் வீடுகளில் வந்து குடியமருமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
யட்டியந்தோட்டை, லெவன் தோட்ட மேற்பிரிவு 1ஆம் இலக்க லயன் குடியிருப்பில் வசித்து வந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர், மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள், வெலிஹெலதென்ன சிங்கள மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மக்களை தத்தம் வீடுகளில் வந்து குடியமருமாறு தோட்ட நிர்வாகம் பணித்துள்ளது.
150 வருடங்கள் பழமைவாய்ந்த இக்குடியிருப்புத் தொகுதியில், மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் தம்மை அக்குடியிருப்பில் வந்து இருக்குமாறு கூறுவது எவ்விதத்தில் நியாயம்? என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும், மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறி லெவன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்த 60 பேர், தோட்ட நிர்வாகத்தின் பணிப்புரைக்கமைய அவர்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். தோட்ட நிர்வாகம் பாராபட்சம் காட்டி வருவதால், தமக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களைக்கூட சரியான முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago