Janu / 2024 மார்ச் 25 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா நகரில் உள்ள மதுபானசாலையை உடைத்து 131,600 ரூபாய் பணம் மற்றும் மதுபானம் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) பதிவாகியுள்ளது.
மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிநாட்டு மதுபானசாலையொன்றில் 131,600 ரூபாய் மற்றும் உள்ளூர் மதுபான போத்தல் ஒன்றும் களவாபட்டுள்ளதாக குறித்த மதுபானசாலையின் முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மதுபானசாலையில் மற்றும் நகரில் உள்ள சி.சி.ரி.வி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது, அதிகாலை 03.30 மணியளவில் குளிர் கோட், முகமூடி அணிந்து, கைகளைத் துணியால் மூடிய ஒருவர் மதுபான சாலையின் பூட்டை உடைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மதுபானசாலையின் பூட்டை உடைப்பதற்குப் பயன்படுத்திய துணியை மதுபானசாலையின் உள்ளே வைத்துவிட்டுச் சென்றுள்ளதுடன், அதனூடாக மோப்ப நாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மஸ்கெலியா தோட்டத்தின் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் சென்று நின்றுள்ளது மோப்ப நாய்.
மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி.பெருமாள்

10 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago