2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மதுபானம் விற்பனை செய்த சகோதரர்கள் கைது

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

நவம் போயா தினமான நேற்று  (16) சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர், ஹாலிஎல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனைக்கமைய, ஹாலிஎல நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 80 மதுபான ​போத்தல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் 50 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும் அவர்களின் வர்த்தக நிலையம் மற்றும் வீட்டிலிருந்து குறித்த மதுபான போத்தல்களைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X