Editorial / 2026 ஜனவரி 04 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட வெஞ்சர் பகுதியில் கடந்த காலத்தில் பியர் மட்டும் விற்பனை செய்து வந்த விற்பனை சாலைக்கு மேலும் மதுபானம் மற்றும் கள்ளு போன்ற குடி வகைகள் விற்பனை செய்ய கலால் திணைக்களம் அங்கீகாரம் வழங்க முயற்சி செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அனைத்து தொடர்ந்து வெஞ்சர், கியூ தோட்ட மக்கள் இப் பகுதியில் மதுபான சாலைகள் வேண்டாம் என கோரிக்கை முன் வைத்து, சனிக்கிழமை(03) காலை 8.45.முதல் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக பியர் விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வந்தது அந்த விற்பனை நிலையத்திற்கு மேலதிகமாக சாராயம் மற்றும் கள்ளுக் போத்தல்களை விற்பனை செய்ய கலால் திணைக்களம் அங்கீகாரம் வழங்க முயற்சி செய்து வருவதாக தெரிய வந்தது .
பெருந்தோட்ட தொழிலாளர்களை இலக்கு வைத்து மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இன்னும் மதுபான சாலைகள் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் நோர்வூட் பிரதேச செயலாளர் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்றனர்.
“பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி”, “சிறுவர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் மதுபோதை”, “பாடசாலை இடைவிலகலுக்குக் காரணமாகும் மதுபானசாலைகள்”, “வெஞ்சரின் எதிர்காலம் மதுபோதையில்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபானசாலை குடியிருப்புப் பகுதியில் இயங்குவதால், அருகிலுள்ள ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தோட்டப் பகுதியில் இந்த மதுபானசாலை அமைந்துள்ளதால், பலர் மாதாந்த சம்பள அடிப்படையில் கடன் புத்தகத்தில் பதிவு செய்து மதுபானம் அருந்தி வருகின்றனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago