Kogilavani / 2021 ஜனவரி 21 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு பேரும், நுவரெலிய மாவட்டத்தில் இரண்டு பேரும் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி மூன்று மாவட்டங்களிலும் இன்று (21) வரை 3,247 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 2,140 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 711 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 396 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 08 சிகிச்சை நிலையங்களில், 1,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago