R.Maheshwary / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41,262 மாணவர்களில், 30,812 பேர் க.பொ.த உயர்தரத்துக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
இந்தப் பெறுபேறுகளின் வீதம் 74.67 அதிகரித்துள்ளது என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தில் 22,023 பரீட்சாத்திகளும், மாத்தளை மாவட்டத்தில் 7,836 மாணவர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 11,403 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இவர்களில் மாத்தளை மாவட்டத்தில் 5,590 மாணவர்களும், கண்டி மாவட்டத்தில் 16,923 மாணவர்களும் , நுவரெலியா மாவட்டத்தில் 8,299 மாணவர்களும் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் மாத்தளை மாவட்டம் 71.34 வீதமும், கண்டி மாவட்டம் 76.84 வீதமும் , நுவரெலியா மாவட்டம் 72.78 என்ற மாவட்ட வீத வளர்ச்சியும் காட்டுவதை அவதானிக்க முடிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .