2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாணத்தில் 42 கொரோனா தொற்றாளர்கள்

Editorial   / 2020 மே 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் 31 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 7 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் மூவரமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 31 பேரில், 21 பேர் கடற்படை வீரர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கண்டி மாவட்டத்தில், அக்குறணைக்கு அடுத்ததாக, நாவலப்பிட்டி பிரதேசத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் நாவலப்பிட்டியில் இதுவரை, ஐவர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X