2026 ஜனவரி 21, புதன்கிழமை

மத்திய மாகாணத்தில் 45,000 கொரோனா தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இதுவரை 45,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த 3 மாவட்டங்களிலிருந்தும் கடந்த 24 மணிநேரத்தில் 908 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 23,598 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 9,923 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 11,573 பேரும் என மொத்தமாக 45,094 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று (18) வரை 1,159 மரணங்களும் பதவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X