Janu / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, தெல்தோட்டை, நவனெலிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் தங்கள் தோட்டத்திற்கு அருகில் அறுந்து விழுந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (7) இடம்பெற்றதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
ஜே.கே.எம். சாந்தி குமாரி மற்றும் 14 வயதுடைய டபிள்யூ. உதயங்கனி நிசன்சலா என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.
தனது தோட்டத்திற்கு அருகில் கருவேப்பிலை பறிக்கச் சென்ற சிறுமி முதலில் மின்சாரம் தாக்கி விழுந்துள்ளதுடன், பின்னர் சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த தாயும் மகளும் தெல்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக சேதமடைந்த நவனெலிய கிராமத்தைச் சுற்றியுள்ள மின்சார அமைப்பை முறையாக மீட்டெடுக்க சரியான கவனம் செலுத்தப்படாததால் குறித்த தாயும் மகளும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
7 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
08 Feb 2026
08 Feb 2026