2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மனைவியின் வாயை வெட்டிய கணவன்

Editorial   / 2024 நவம்பர் 28 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவனுக்கு எதிராக  மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போது, ​​கணவன், மனைவியின் கழுத்தையும் வாயையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம், மாவனல்ல பொலிஸில் கடந்த 26ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

மறைத்து வைத்திருந்த பேப்பர் கட்டர்   21 வயதான மனைவியை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அந்த யுவதி, மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், 39 வயதுடைய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மாவனெல்லையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே காயமடைந்துள்ளார்.

இந்த இளம் மனைவி சில காலமாக கணவனால் வெளிதரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 24ம் திகதி, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இது குறித்து மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கு முன்னரும் கணவனுக்கு எதிராக மனைவி முறைப்பாடு செய்திருந்ததாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை கைத்தொலைபேசியில் வைத்திருக்கும் கணவன் மனைவியை பயமுறுத்தி பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

கணவனுக்கு எதிராக மனைவி மாவனல்ல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இருவரும் பொலிஸூக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்தே, கணவன், மனைவியின் வாய், கழுத்து மற்றும் பல இடயங்களில் வெட்டியுள்ளார்.   

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .