2026 மே 09, சனிக்கிழமை

மனைவியைக் கடத்த முற்பட்டவர் நண்பர்களுடன் கைது

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத் தகராறு காரணமாக கணவனைப் பிரிந்துவந்து தாய் வீட்டில் வசித்து வந்த பெண்ணை, அவரது கணவர் தனது நண்பரக்ளை அழைத்துவந்து, வலுக்காட்டாயமாக இழுத்துச் செல்ல முற்பட்டச் சம்பவம் ஒன்று, கண்டி- பூஜாப்பிட்டியப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் (31)  இரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண், கந்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். எனினும் அவ்விருக்கும் இடையில் தொடர்ச்சியாகக் கருத்துமுரண்பாடு ஏற்பட்டுள்ளதால், அவர் கணவனைப் பிரிந்து  தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேற்படிப் பெண்ணின் கணவர், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு சனிக்கிழமை (31) இரவு குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளதுடன், உறவினர்களைத் தாக்கிவிட்டு பெண்ணை வலுக்காட்டாயமாக இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது பெண்ணின் உறவினர்களுக்கும் குறித்த பெண்ணின் கணவர் அழைத்துவந்த நண்பர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதனை அவதானித்த பிரதேச மக்கள், குறித்த நபரையும் அவரது நண்பர்களையும் நையப்புடைத்துள்ளதுடன், மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய எழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .