Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 28 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தில் தனது மனைவியை, கோடரியால் தாக்கி படுகொலை செய்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் திலின எம்.பீரிஸ் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மாதம் 25ஆம் திகதி இரவு இடம்பெற்ற இச்ம்பவத்தில் 26 வயதான சுப்பிரமணியம் சத்தியவாணி என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார்.
தனது பிள்ளைகளுடன் சரணடைந்த சந்தேகநபரான அப்பெண்ணின் கணவரை , நுவரெலியா பொலிஸார் நேற்று மாலை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
மேலும் பிள்ளைகள் இருவரையும் அரசாங்க குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணுடைய தாயின் பராமரிப்பில் பிள்ளைகளை பராமரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .