2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவன்

Janu   / 2024 நவம்பர் 18 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெஹெரகல பகுதியில் தனது 42 வயதுடைய மனைவியை மது போதையில் இருந்த நண்பனுக்கு விருந்தாக்கிய கணவனை பொலிஸார் ​தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில்,  இரு மூத்த பிள்ளைகளும் வேறு பகுதிகளில் பணிபுரிகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த 9ஆம் திகதி  அப்பெண்ணின் கணவர், அவரது நண்பரான சமிந்தவின் செங்கல் பட்டறைக்கு சென்று மாலை 4  மணியளவில் அவரது முச்சக்கர வண்டியிலேயே  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து இருவரும் மது அருந்தி விட்டு இரவு 9.30  மணியளவில் மீண்டும் வெளியே சென்றுள்ளனர்.

 பின்னர், அந்த பெண் தனது 12 வயதுடைய சிறுவனுடன் அறைக்குச் சென்று கணவர் வரும் வரை தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

நள்ளிரவு 12 மணியளவில் கணவர் , சமிந்த என்பவருடன் மீண்டும் மது அருந்திவிட்டு வந்து குறித்த பெண்ணை வேறு அறைக்கு இழுத்துச் சென்று   முகத்தில் தலையணையை வைத்து, “உன் ஆசையை நிறைவேற்றிக்கொள் ” என நண்பரிடம் கூறி  பாலியல் வன்புணர்வுக்கு அனுமதித்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் அதிகாலை 4 மணியளவில், கணவன் அப்பெண்ணை  பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபரான  40 வயதுடையவர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச் சம்பவத்திற்கு  உடந்தையாக இருந்த  நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X