R.Maheshwary / 2022 ஜூலை 03 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
பொருளாதார நெருக்கடி என தெரிவித்து, 25 வயதான தனது மனைவியை நபர் ஒருவர் வெளிநாடு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதைனைத் தடுக்குமாறு தெரிவித்து நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரத்தினபுரி- துரெக்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் ரவீந்திரன் என்ற நபரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்றும் முறையே 11, 6,3,2 ஆகிய வயதுகளையுடைய குழந்தைகளுள் ஒரு குழுந்தை விசேட தேவையுடைய பெண் பிள்ளை என்றும் தெரிவித்துள்ளார்.
தானும் மனைவியம் தேயிலைத் தோட்டமொன்றில் தொழில் செய்து வரும் நிலையில், தனது மனைவியை நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது அதன நிமித்தம் வீட்டிலிருந்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தாயைத் தேடி பிள்ளைகள் அழுவதால் மனைவியை வெளிநாடு செல்வதைத் தடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago