Kogilavani / 2021 மே 20 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்த உதய
எஹலியகொட மின்னான பிரதேசத்தில், தலை வேறு முண்டம் வேறாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர், கொலை, கொள்ளை போன்ற பல குற்றங்களுடன் தொடர்புடைய 'மன்னா ரொஷான்' என்ற அழைக்கப்படும் நபரின் உதவியாளர் என்று தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது நண்பரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எஹலியகொட மின்னான பிரதேசத்தில், தலை வேறாகவும் முண்டம் வேறாகவும் கிடந்த நிலையில் ஆணின் சடலமொன்று, நேற்று முன்தினம் (18) மீட்கப்பட்டது.
கொலை வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவிசாவளை கலபிட்டிமட பிரதேசத்தைச் சேர்ந்த கொடிகார ஆராச்சிலாகே கனிஷ்க கயான் (வயது 24) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கிடப்பதுத் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், வீதியோரத்திலிருந்து சடலத்தையும் அவ்விடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் புதருக்குள் வீசப்பட்டிருந்த பையொன்றுக்குள் இருந்து தலையையும் மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில், கப்பம் பெற்ற குற்றத்துடன் தொடர்புடைய மின்னான போபெத்தே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான இளைஞரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
எஹலியகொட போபெத்த இறப்பர் தோட்டத்தில் வைத்தே, சந்தேக நபர் குறித்த நபரை, கூரிய கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட பகையொன்றின் காரணமாகவே, சந்தேக நபர் குறித்த நபரை கொலைசெய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago