கு. புஷ்பராஜ் / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரபத்தனை பிரதேசத்துக்குட்பட்ட மன்றாசி நகரத்தில், பல வருடங்களாக பஸ் தரிப்பிடமொன்று இன்மையால், பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த நகரத்தில், கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் பஸ் தரிப்பிடமொன்று இருந்தபோதிலும், அந்த பஸ் தரிப்பிடத்தின் மீது வாகனமொன்று மோதியதில், பஸ் தரிப்பிடம் சேதமடைந்திருந்தது என்றும் எனினும், அதை மீண்டும் மீளமைத்துக் கொடுப்பதற்கு, எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள் தினந்தோறும் மழையில் நனைந்தபடியே பஸ்களுக்காக காத்திருக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பஸ் தரிப்பிடமொன்று இன்மையால், பொதுமக்களும் கடையோரங்களில் நின்றபடியே பஸ்களுக்காக காத்திருப்பதாகவும் இதனால், வியாபாரிகளுக்கும் பிரச்சினை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, மன்றாசி மக்களின் நலன் கருதி, நகரில் பஸ் தரிப்பிடமொன்றை நிர்மாணித்துத் தருமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago