Sudharshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சித்திரவதை செய்தது மட்டுமல்லாது அவர்களது உடலில் தீக்காயங்கள், வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் நபரை பலாங்கொடை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பலாங்கொடை மத்தேகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ராசைய்யா விஷ்வனாதன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது மனைவி (வயது 42) மற்றும் 18 வயது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன் அவர்களது கால்களை நெருப்பினால் சுட்டுள்ளார்.
இதேவேளை, தனது கடைசி மகளை (13 வயது) கத்தியால் தாக்கி முகத்தில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் வீட்டின் பின்புறத்தில் அடைத்து வைத்துள்ளார். இவ்வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் மேற்படி மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்களது உடல் முழுதும் தீக்காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
6 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago