2021 ஜூலை 31, சனிக்கிழமை

மரக்கறி உற்பத்தியில் பாரிய அளவு வீழ்ச்சி

பா.திருஞானம்   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மரக்கறி உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மரக்கறி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இங்கிருந்து கொழும்பு, தம்புளை ஆகிய பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கொண்டுச் செல்லப்படும் மரக்கறிகறிகளின் விலைகளை, மரக்கறிகளை மொத்தமாகக் கொள்வனவு செய்பவர்களே தீர்மானித்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாகவே, மரக்கறிச் செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக, விவசாய மண், களிமண்தன்மையில் காணப்படுகின்றதோடு, இதனால், மரக்கறிகளின் வளர்ச்சி குறைவடைந்துள்ளது.

அத்துடன், விவசாய நிலங்களுக்குப் போடப்பட்ட சேதன, அசேதன உரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே போடப்பட்ட சில மரக்கறிகள் மழை காரணமாக அழுகியுள்ளன.

இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .