Freelancer / 2023 ஜூலை 03 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால். இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
மலையகத்தில் இவ்வாறான காலநிலையால் மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில்….
லீக்ஸ் ஒரு கிலோ கிராம் விலை – 200 ரூபாய்
பாவக்காய் ஒரு கிலோ கிராம் விலை – 200 ரூபாய்
வெண்டிக்காய் ஒரு கிலோ கிராம் விலை – 190 ரூபாய்
புடலங்காய் ஒரு கிலோ கிராம் விலை – 180 ரூபாய்
தக்காளி ஒரு கிலோ கிராம் விலை – 360 ரூபாய்
கோவா ஒரு கிலோ கிராம் விலை – 320 ரூபாய்
கறிமிளகாய் ஒரு கிலோ கிராம் விலை – 480 ரூபாய்
கத்திரிக்காய் ஒரு கிலோ கிராம் விலை – 250 ரூபாய்
நுவரெலியா உருளை கிழங்கு ஒரு கிலோ கிராம் விலை – 290 ரூபாய்
போஞ்சி ஒரு கிலோ கிராம் விலை – 600 ரூபாய்
பச்சைமிளகாய் ஒரு கிலோ கிராம் விலை – 500 ரூபாய்
கரட் ஒரு கிலோ கிராம் விலை – 440 ரூபாவிலிருந்து 480 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
12 minute ago
16 minute ago
29 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
29 minute ago
9 hours ago