R.Maheshwary / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி -கட்டுகஸ்தோட்டை நகரிலுள்ள மர ஆலை ஒன்றில் வேலை செய்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், மரக்குற்றி ஒன்று உடலில் விழுந்தால் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை குறித்த நபர், மரக்குற்றிகளை கேபல் மூலம் இறக்கிக் கொண்டிருந்த போது, அக் கேபல் உடைந்ததன் காரணமாக மரக்குற்றி ஒன்று உடலில் விழுந்துள்ளது. இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான அவர், கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .