Editorial / 2022 நவம்பர் 22 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருமகன் தாக்கி, மாமியார் பலியான சம்பவமொன்று வலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், 59 வயதுடைய டப்ளியூ.ஜி.ரணசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் பகிந்தளிக்கப்பட்டன.
அவ்விடத்தில், மகள், மருமகன், மாமி ஆகிய மூவரும் வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அதன்போதே, மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால், 27 வயதான மருமகன், மாமியாரை தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவ்விடத்திலேயே மாமி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதணைக்காக ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த தெரிப்பெய பொலிசார் மருமகனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். (ஆ.ரமேஸ்)
8 hours ago
9 hours ago
27 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Nov 2025