Editorial / 2023 ஜூலை 04 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்துள்ளார்.
அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெண் தொழிலாளிகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
இந்த சம்பவம், வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அத்தொழிலாளி மரணமடைந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான, சண்முகம் விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்தப் பிரதேசத்தில் காலையில் இருந்து காற்று சீறி,சீறி வீசுவதுடன், கடும் மழை பெய்துள்ளது. வெளியில் தலையைக் காட்டாதவகையில் மழை பெய்துள்ளது. நிலைமையை விளங்கிக்கொண்ட பெற்றோர், நெல்லிமலை சிவனேஸ்வரா வித்தியாலயத்துக்கு வருகைதந்து, தங்களுடைய பிள்ளைகளை இடைநடுவிலேயே வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
மெய்யன்
11 minute ago
15 minute ago
28 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
28 minute ago
9 hours ago