Janu / 2024 மார்ச் 20 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் புதிதாக மருத்துவ பீடத்தை தாபிக்கும் நிகழ்வு பதுளை தபாலகக் கட்டிடத் தொகுதியின் நிமல் சிறிபால டி சில்வா கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (22) பி.ப.3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவின் அழைப்பின் பேரில் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார். இந்நிகழ்வில் மருத்துவ பீடத்திற்கு புதிதாக உள்வாங்கப்படவுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெறவுள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களை தெளிவூட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
குறித்த தினத்தில் மருத்துவ பீட மாணவர்களின் கற்கைக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 400 இலட்சம் பெறுமதியான உடற்கூறு பரிசோதனை ஆய்வுகூடம் திறந்து வைக்கப்படவுள்ளது.
41 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
2 hours ago