Editorial / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ், செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, நல்லதண்ணி பிரிவுக்கு உட்பட்ட மறே தோட்டம், பீட்வில் தனியார் தோட்டத்தில், மஸ்கெலியா பொலிஸார், நல்லதண்ணி அதிரடிப்படையினர் இணைந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். டுபாய் நாட்டுப் பிரஜையான மஜித் அல்பலாசி என்பவரால் முகாமைத்துவம் செய்யப்படும் தேயிலைத் தோட்டத்திலுள்ள பங்களாவிலிருந்து வாக்கிடோக்கிகள் நான்கு, அதற்கான உபகரணங்கள், டுபாய் நாட்டு சின்னங்கள், டுபாய் நாட்டுக் கொடிகள் என்பவையும் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நல்லதண்ணி அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, மேற்படித் தோட்டத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர், டுபாய் நாட்டுக்குச் சென்றிருப்பதாகவும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையே இலங்கைக்கு வந்து செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டத்தின் உரிமையாளர், தனது சொந்தப் பாவனைக்காகவே மேற்படி உபகரணங்களை, தனது அறையில் வைத்திருந்ததாக தோட்டத்தின் உதவி முகாமையாளர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago