Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் ஆயுர்வேத வைத்தியர் என்று தன்னை வெளிப்படுத்தி ஹட்டன் நகரில் ஆயுர்வேத வைத்திய நிலையமொன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டுள்ள மற்றுமொரு வைத்தியரின் பதிவு இலக்கத்தை கொண்டு குறித்த சந்தேக நபர் ஹட்டன் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் குறித்த ஆயுர்வேத வைத்திய நிலையத்தை நடத்திச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக குறித்த வைத்திய நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள் மற்றும் மருந்து வகைகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
36 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
2 hours ago
3 hours ago