2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மற்றுமோர் உறுப்பினருக்கு எதிராக இ.தொ.கா நடவடிக்கை

R.Maheshwary   / 2022 ஜூலை 31 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அக்கரப்பத்தனை பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்செல்வனை உடனடியாக பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

பிரதேசசபை தவிசாளருக்கு எதிராக மக்கள் தரப்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரை உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று கூடியபோதே,  இந்த உத்தரவு காங்கிரஸின் பொது செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X