2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மலசலக்கூட வசதியின்றி பயணிகள் அவதி

Kogilavani   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பஸ்தரிப்பிடங்களில், மலசலகூட வசதியின்மையால் தூர பிரதேசங்களுக்குச் செல்வதற்காக பஸ்களுக்காகக் காத்திருக்கும் பயணிகள், பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி நகரசபைக்கு உட்பட்ட செலான் சந்தி, கொடிகமுவ சந்தி, இரத்தினபுரி, பாணந்துறை வீதிச்சந்தி, பொலிஸ் நிலையம் (விளையாட்டு மைதானம்) ஆகிய இடங்களில் காணப்படும் பஸ்தரிப்பு நிலையங்களிலேயே, இந்நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, பதுளை, எம்பிலிப்பிட்டிய, அம்பாறை மற்றும் கொழும்பு வரையிலான இடங்களுக்குப் பயணிப்பதற்காக கர்ப்பிணிகள், சிறுவர்கள், வயோதிபர்கள் நீண்டநேரம் காத்திருப்பதாகவும் இவர்கள் அவசரத் தேவைகளுக்காக மிகத் தொலைவிலுள்ள இரத்தினபுரி பஸ்தரிப்பிடத்துக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X