Editorial / 2019 ஜூன் 28 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
மலையகத்தின் அபிவிருத்தியையே தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், மாறாக இராணுவ முகாம்களை அல்லவெனவும், மலையகத்தில் இராணுவ முகாம்கள் முளைக்க இடமளியோம் என்றார்.
அவசரக்காலச் சட்டம் நீடீப்புத் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்புக்காக எந்தவோர் இழப்புகளை தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் ஆனால், பயிரை மேய்ந்த வேலியாக, அவசரக்காலச் சட்டம் அமையக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
மலையகத்திலும் புதிதாக இராணுவ முகாம்கள் முளைக்கப்பாதாகத் தெரிவித்த அவர், தான் இதுத் தொடர்பில் தலையீடுகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையகத்தில் இராணுவ முகாம்கள் முளைத்தால், மலையக இளைஞர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகுவார்கள் எனவும் மலையகத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தரிசு நிலங்களை மலையக இளைஞர்கள் பயன்படுத்தும்போது, பொலிஸார் தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அதற்கு தனது கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago