Kogilavani / 2021 மே 18 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாத்
பெருந்தோட்ட மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்துப் பாதுகாப்பதற்கு, மலையகத்தில் சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று, சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும், அதிலிருந்த தம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியோ அல்லது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியோ தெரியாது பெருந்தோட்ட மக்கள் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், “நெருக்கமான குடியிருப்புகள், சுகாதார வசதிகள் குறைந்த வாழ்க்கை முறை இவற்றுக்கும் அப்பால் வைத்திய சிகிச்சைகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை என்பவை, பெருந்தோட்ட மக்களின் இருப்புக்கு பாரிய சவாலாக மாறியுள்ளன.
“எனவே பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில், தற்காலிக PCR பரிசோதனை நிலையங்களையும் சிகிச்சை நிலையங்களையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
“சுகாதார துறையினரும் அரசாங்கமும் அவசரகால தேவையாகக் கருதி கொரோனா சிகிச்சை வசதிகளையும் PCR பரிசோதனை வசதிகளையும் அதிகரித்து எம் மக்களை காக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago