Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
மலையகத்தில் பெய்து வந்த மழை தற்போது குறைந்து, பனியுடனான வானிலை காணப்படுவதன் காரணமாக, மலையகத்தின் பல பகுதிகளில், தடிமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய் அதிகரித்துள்ளதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களுக்கும் முதியவர்களுக்குமே, தொற்றுநோய் அதிகளவு ஏற்பட்டு வருவதாகவும் அத்துடன், டெங்கு நோய் பரவும் அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, தடிமலோ காய்ச்சலோ ஏற்படுமாயின், உடனடியாக வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அத்துடன், வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்குமாறும் வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, பதுளை, பண்டாரவளை, தியத்தலாவ, மொனராகலை, மஹியங்கனை, வெலிமடை ஆகிய பகுதிகளிலேயே, தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago