Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.
மலையகத்தின் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்களான, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி (UPF) ஆகியன இந்த முடிவை அறிவித்துள்ளன.
மே தின பேரணிகளுக்கு பதிலாக, தோட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விசேட சமய வழிபாடுகளை நடத்தவும், தத்தமது தொழிற்சங்கக் கொடிகளை ஏற்றி தொழிலாளர் தினத்தை நினைவுகூரவும் திட்டமிட்டுள்ளதாக குறித்த சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்தும் மே தின பேரணியில், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த ஆண்டு எவ்வித பேரணிகளிலும் ஈடுபடாமல் சமய நிகழ்வுகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பி. கேதீஸ்
37 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
16 May 2026
16 May 2026
16 May 2026