ஆ.ரமேஸ் / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று (21) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து, மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடுதல் வேட்டையைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லிந்துலை உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் கைதுசெய்யப்பட்டு வருவதுடன், முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்துக்கு இடமானவர்கள் தொடர்பில் உடனடியாகத் தகவல்தருமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா, நுவரெலியா, கண்டி, மாத்தளை, தம்புள்ளை உள்ளிட்ட பகுதிகளில், பொலிஸாரும் முப்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டத்தில், கந்தப்பளை பொலிஸார் முழு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சில முக்கிய நகரங்களில், பயணிகள், வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் இவ்வாறான கெடுபிடிகள் அதிகரித்துள்ளதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதான நகரங்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை வியாபாரம் களைக்கட்டும் என்ற போதிலும் நேற்று (28) நகர்புறங்களின் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் களையிழந்தே காணப்பட்டன.
1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago