Mayu / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நானுஓயா பிரதான நகரத்திலும் இன்றைய தினம் (18) விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நானுஓயா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் சோதனையிட்டுள்ளனர்.
அத்துடன் நானுஓயா பிரதான வீதியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களையும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் , வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரியும் இளைஞர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
செ.திவாகரன் , டி.சந்ரு




1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago