Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனத்தில், மலையகத்தின் மறுமலர்ச்சிக்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
“மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகமாற்றத்தின் ஊடாக மக்களின் வாழ்க்கை, சமூக நிலைமையை மேம்படுத்துவதற்காக முக்கியமான பல திட்டங்களை, எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளார்” என்றும் அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு திரட்டி அவிசாவளையில், நேற்று (31) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்தஅவர்,
“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை, சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியினராகிய நாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, எமது மக்களின் சார்பில் முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். காணி உரித்துடன் வீட்டுரிமை, தொழிற்பயிற்சி நிலையங்கள், கல்வி , சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை இவற்றில் மிக முக்கியமானவையாகும்.
இந்நிலையில் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், எம்மால் முன்மொழியப்பட்ட யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களை ‘கைக் கூலி’ என்ற நிலையிலிருந்து, நிலையான வருமானம் பெறுபவர்களாக மாற்றும் வகையிலான முகாமைத்துவ முறைமையை அறிமுகப்படுத்தவும், தனியார், அரச நிறுவனங்களுடன் இணைந்து, கூட்டாக இதற்கான நடவடிக்கை முன்னெடுப்பதற்கும் உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது. இது எமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருக்கின்றது” என்றார்.
“நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி செயலணியை சஜித் பிரேமதாஸ உருவாக்குவார்” என்றார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago