2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

மலையகத்துக்கு வருவோருக்கு அறிவித்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு வருவோர் உரிய தரப்புகளுக்கு தகவல்களை வழங்குமாறு மலையக பிரதேசத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.

'கொரோனா' வைரஸ் தொற்று அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து - எவ்வித தகவல்களையும் வழங்காமல் ஒளிந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள்ளேயே நேற்று (02) முதல் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புத்தளத்தை சேர்ந்த ஒருவரும், கொழும்பில் தொழில் புரியும் மற்றுமொரு நபருமே தலவாக்கலையில் இவ்வாறு மறைந்திருந்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுகாதார பரிசோதனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே அவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் எழுவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் லக்மால் த சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு இக்காலப்பகுதியில் வருவோர் உரிய தரப்புகளுக்கு தகவல்களை வழங்குமாறு கோருகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X