2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

‘மலையகத்தை டெங்கு, எலிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்க விசேட தேசியத் திட்டம்’

Editorial   / 2020 மே 13 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆ.ரமேஸ், பி.கேதீஸ்

கொவிட்-19இல் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்ற அதேநேரத்தில், வாநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள டெங்கு, எலிக்காய்ச்சல் ஆபத்தில் இருந்து, மக்களைக் காப்பாற்ற, விசேட தேசியத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட வெண்டும் என, சுகாதார அமைச்சர் பவித்தரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

இந்நிலையில், மாவட்ட ரீதியாக, டெங்கு, எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல, மாவட்ட செயலாளர்கள் ஊடாக, புதிய பணியொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.

நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமாரவில் தலைமையில், ஸ்ரீமாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுகாதாரம்  தொடர்பான கலந்துரையாடலில், நேற்று (12) கலந்துகொண்டு கருது்துத்  தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக பெருந்தோட்டங்ளிலுள்ள தொடர் குடியிறுப்புகளில் வாழும் மக்களை, கொவிட்-19 பாதிப்பில் இருந்து பாதுகாக்கவேண்டுமு் என, அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கமைய, இனி வரும் காலப்பகுதியில், நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட ஏனைய பெருந்தோட்ட பகுதிகளில் கிராமிய குழுக்களை அமைத்து சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் இருந்து மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு வருகைதரும் நபர்கள் தொடர்பாக விழிப்பை ஏற்படுத்துவது அவசியமெனவும் நுவரெலியா மாவட்டத்துக்கு வருகை தரும் நபர்களை கண்காணிக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .