R.Maheshwary / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பில் காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராக, வடக்கு முதல் தெற்கு வரை இடம்பெறும் கையெழுத்து இயக்கமானது, எதிர்வரும் சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 6 மணிவரை கொழும்பு மருதானை டீன்ஸ் வீதி CSR மண்டபத்தில் கையெழுத்தை திரட்டவுள்ளது.
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நீதி கிடைக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ,தலைநகர் வாழ் மலையக உறவுகள் ஒன்றிணைந்து ஆதரவு தாருங்கள் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இராமான் செந்தூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலையக அரசியல் அரங்கம் சார்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இந்த அழைப்பில் மேலும் தெரிவுக்கப்பட்டிருப்பதாவது,
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக விடயத்தில் அரச ஆணை மீறப்பட்டதற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரதும் கவனத்துக்குக் கொண்டு சென்று ,நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நீதி வேண்டிய 'வடக்கு முதல் தெற்கு வரை' கையெழுத்து இயக்கத்தை மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி ஆகியப் பிரதேசங்களில் கையெழுத்து இயக்கத்துக்கு பொது மக்கள் தமது ஆதரவை வழங்கி உள்ளனர்.
வடக்கு பயணம் முடிந்து தெற்கு நோக்கிய பயணத்தில் தலைநகரில் வாழும் உறவுகள், அமைப்புகள், மலையகத் தமிழ் மக்களுக்கான இந்த சாத்வீகப் போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவைத் தருமாறு மலையக அரசியல் அரங்கம் வேண்டி நிற்கிறது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 minute ago
13 minute ago
14 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
14 minute ago
15 minute ago