2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

மலையக குயிலுக்கு யாழில் கெளரவிப்பு

Janu   / 2024 ஜனவரி 01 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  நடைபெற்ற  சரிகமப பாடல் போட்டியில் பங்கேற்ற அசானி, ஞாயிற்றுக்கிழமை (31) யாழ்ப்பாணத்திற்கு சென்று தனக்கு உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் சென்றுள்ள அசானிக்கு, யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளார்.

இதன்போது அசானி  தெரிவித்துள்ளதாவது, “இன்று தான் முதன்முறையாக யாழ்ப்பாணம் வருகை தருகின்றேன். தமிழ் மக்கள் எனக்கு வழங்கிவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் பெரிய பாடகியாக  வந்து, அதன் மூலம் மூலம்  எனது மக்களுக்கு உதவி செய்வதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X