Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு, நீண்டகாலமாகச் செயற்பட்டு வரும் பெருந்தோட்ட சமூக மாமன்றம், அண்மைக் காலமாக அதன் செயற்பாடுகளில் ஸ்தம்பித நிலையை எதிர்நோக்கியிருந்தது என்றும் எனினும், இப்போது புனரமைக்கப்பட்டுள்ளமையால், மலையகத்தை, மீண்டும் பின்நோக்கிச் சென்று விடாமல், தடைகளைக் கடந்து முன்னேறிச் செல்ல, அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்ய வேண்டும் என, பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஆர்.ஜோக்கிம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஒன்று கூடலும் புதிய உத்தியோகத்தர் தெரிவும், ஹட்டன் ஹில்வியூ விருந்தகத்தில், நேற்று (14) நடைபெற்றது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையகத்துக்கென அபிவிருத்திச் சபை, நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வருவதாகக் கூறிய அவர், அதற்கான அங்கிகாரமும் அமைச்சரவையில் பெறப்பட்டதாகவும் கூறினார். எனினும், அதன் பெறுமதியை உணராத சிலர், அந்த அதிகார சபையைக் குறைத்து மதிப்பிட்டு கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
எனவே மலையக சமூகம் மீண்டும் பின்னோக்கிச் சென்று விடாமல், தடைகளைக் கடந்து முன்னேறுவதற்கு, நாம் அனைவரும் பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் ஊடாக ஒன்றுபட்டு செயற்படத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அந்த வகையில் இந்த மாமன்றம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எனவே தமது பரிந்துரைகளின் மூலம், பிரதேச செயலகங்களை எமது சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அந்த வேலைத் திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago