Editorial / 2020 மே 07 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வெசாக் நோன்மதி தினம், மலையகத்தில் வாழும் பௌத்தர்களால், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, வீட்டில் இருந்தவாரே கொண்டாடப்பட்டது.
எப்போதும் வெசாக் பண்டிகை காலத்தில், இலங்கை முழுவதும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இம்முறை அனைவரும் வீட்டிலேயே இருந்தனர்.
கடந்த ஆண்டு, ஈஸ்டர் குண்டுதாக்குதல் காரணமாக கடந்த வருடம் பாதுகாப்பு தரப்பின் ஆலோசனைக்கு அமைய பொதுவெளியில் தோரணங்களைக் காட்சிப்படுத்தல், அன்னதானம் வழங்குதல் போன்றன நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இம்முறையும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெசாக் தினத்தை முன்னிட்டு நடைபெறும் பிரதான நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால், மலையக நகரப்பகுதிகளில் நேற்று (06) பௌத்த கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. பௌத்தர்களின் வீடுகளுக்கு முன்னால் மின் விளக்குகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. வீட்டுக்குள் இருந்தபடியே வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
விகாரைகளில் அங்குள்ள தலைமை விகாராதிபதியின் தலைமையில் வழிபாடுகளும், போதனைகளும் இடம்பெற்றன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago