2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’மலையக மக்களின் போராட்டம் செயலிழக்கப்பட்டுள்ளது’

ஆர்.மகேஸ்வரி   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆயுதமான போராட்டம் தற்போது செயலிழக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே என மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அமைச்சின் கடமைகளை இன்று (26) அமைச்சில் பொறுப்பேற்றப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

கூட்டொப்பந்தத்தில் கையொப்பம் இடும் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து விலகினால், தாமும் அவர்களுடன் இணைந்து மலையக மக்களின் சம்பளப் போராட்டத்துக்காக போராடத் தயாராகவிருப்பதாகத் தெரிவித்ததுடன், 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு என்பது சாத்தியமற்றதொன்றென சாதாரணத் தோட்டத் தொழிலாளர்கள் கூட புரிந்துக்கொண்டுள்ள நிலையில், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக 1000 ரூபாய் சம்பளம் தொடர்பில் வாக்குறுதி​களை வழங்குவதாகத் தெரிவித்தார்.

தான் அமைச்சரானவுடன் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பேன் என யாராவது எதிர்பார்த்தால் அது நிறைவேறாது. ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகி இந்த விடயங்களை முன்னெடுக்கவில்லை மாறாக அவர் தொழிற்சங்கமொன்றின் தலைவராகத்தான் செயற்பட்டார். 60 சதவீதமான அங்கத்தவர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களே சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குச் செல்லலாம் என்ற ஒரு ஏற்பாடு உள்ளது. எனவே இதில் நாம் தலையிட முடியாத சட்டசிக்கல் ஒன்று உள்ளது.

எனவே சம்பளப் பிரச்சினைத் தொடர்பான போராட்டங்கள் என்பது வலுவானப் ​போராட்டமாக இருக்க வேண்டும் என்தால் தொழிற்சங்கங்கள் கூட்டடொப்பந்தத்திலிருந்து விலகி வலுவானப் போராட்டத்தை முன்னெடுக்க எம்முடன் தயாராக வேண்டும். ஆனால் ஆறுமுகன் தொண்டமான்  கல்யாண வீட்​டில் மாப்பிளையாகவும் சாவு வீட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என்ற நினைப்பில் தான்  சம்பளப் பிரச்சினை விடயத்தில் செயற்படுகின்றார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .