Janu / 2026 மே 06 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டிட்வா' சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதையின் 97 இடங்களில், 92 இடங்கள் இது வரை சீரமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மருதானையிலிருந்து பேராதனை வரையிலான பிரதான ரயில் பாதையில் நிலச்சரிவுகள், மண் அரிப்பு, பாறைகள் சரிந்து விழுந்தமை, பாலங்கள் மற்றும் மதகுகள் சேதமடைந்தமை உள்ளிட்ட 97 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. தற்போது ரம்புக்கனை முதல் கடுகண்ணாவை வரையான பகுதிகளில் எஞ்சியுள்ள 5 இடங்களில் திருத்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விசேட பொறியியல் திட்டமிடல் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு, சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. சில இடங்களில் நிலவும் சிக்கலான புவியியல் தன்மைகள் காரணமாக, நீண்டகாலப் பாதுகாப்பு தீர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ரயில் பாதை வழியாக மட்டுமே பாதிக்கப்பட்ட இடங்களை அணுக முடியும் என்பதால், ஒரு இடத்தின் வேலையை முடித்த பின்னரே அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மூலப்பொருட்களைக் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக, சில இடங்களில் ரயில் தண்டவாளங்களை அகற்றிவிட்டு, வாகனங்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லும் விசேட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ரம்புக்கனை முதல் கடிகமுவ வரை கடந்த மே 03 ஆம் திகதி முதல் சேவை ரயில் (Service Train) இயக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago