Editorial / 2020 பெப்ரவரி 28 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கலை இலக்கிய பேரவையின் மலையகக் கிளையின் ஏற்பாட்டில், மலையகத்தின் மூத்த எழுத்தாளர் அமரர் மல்லிகை சி.குமாரின் நினைவேந்தல் நிகழ்வு "மக்கள் கலைஞன் மல்லிகை சி.குமார் நினைவு நிகழ்வு" எனும் தொனிப்பொருளில், தலவாக்கலை கதிரேசன் கோயில் மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (1) மு.ப 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
பேராதனை பல்கலைகழகத்தின் தமிழ்த் துறை விரிவுரையாளர் ஆ.ஜெயசீலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 'மலையக இலக்கிய அமைப்புகள் பயணிக்க வேண்டிய பாதை' எனும் தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளார்.
கல்வி அமைச்சின் பணிப்பாளர், கவிஞர் சு.முரளிதரன் 'மல்லிகையின் படைப்பும் வாழ்வும்' எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
பெருவிரல் அமைப்பின் சுதர்ம மகாராஜன், பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஆ.புவியரசன், எழுத்தாளர் மலரன்பன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.
கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்று நிறைவுரையை தேசிய கலை இலக்கிய பேரவையின் பொதுச் செயலாளர் சிவ.இராஜேந்திரன் நிகழ்த்தவுள்ளார்.
4 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 Dec 2025